காதலுக்குள் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர்: சிக்னல் அட் 11.30 திரைவிமர்சனம்

Wait 5 sec.

இயக்குநர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா, பவ்யா த்ரிகா நடிப்பில் சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகி இருக்கிறது சிக்னல் அட் 11:30. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஜெயப்பிரகாஷின் மகளான பவ்யா த்ரிகா தொலைக்காட்சியில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஒருநாள் இரவு வேலையை விட்டு வீட்டிற்கு திரும்பும் போது நான்கைந்து பேர் அவரை இரு சக்கர வாகனத்தில் துரத்துகின்றனர். அப்போது அந்த வழியாக வரும் நாயகன் சந்தோஷ் பிரதாப் பவ்யாவின் வாகனம் மட்டும் சாலையோரம் இருப்பதை கவனித்து அவரைத் தேடுகிறார். பவ்யா தொலைந்து போனதை அறிந்த அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் தன்னுடைய மகளை இழந்ததாக காவல் நிலையத்தில் அடைகிறார். பவ்யா என்ன ஆனார்? சந்தோஷ் பிரதாப் இந்த கதைக்குள் எப்படி வந்தார்? மீதி என்ன நடந்தது என்பதை சிக்னல் அட் 11:30 திரைப்படத்தில் காணலாம். நாயகனாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தன்னை தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். புஜிதாவுடனான அவரது காதல் காட்சிகள் திரையை அழகாக ஆக்கிரமித்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் குழப்பமான மனநிலையில் இருக்கும் அவர் அதை தனது உணர்வுகளால் அழுத்தமாக கடத்திருக்கிறார். சிக்னல் அட் 11.30 திரைப்படக் காட்சிஅவருக்கு போட்டியாக காதல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார் புஜிதா. துணிவான பெண்ணாக காதலை மறுத்து செல்லும் இடம் தொடங்கி, சந்தோஷிடம் அதே காதலால் சரணடைவது வரை வித்தியாசம் காட்டிய அவரது நடிப்பு ரசிக்கச் செய்திருக்கிறது. இவ்வளவு அழகான புஜிதாவிற்கு தமிழ் சினிமா இன்னும் கூடுதல் வாய்ப்பு கொடுக்கலாம். இவர்களைத் தவிர படம் முழுக்க வந்திருக்கிறார் பவ்யா. அப்பா-மகள் பாசத்திற்கு இடையேயான இடங்களிலும், இரண்டாம் பாதியில் எடுத்திருக்கும் வித்தியாசமான அவரது கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது. இத்துடன் நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், முனிஸ்காந்த் என பலர் நடித்துள்ளனர்.திரைக்கதையாக படம் விறுவிறுப்பைக் கடத்தத் தவறவில்லை. பவ்யாவிற்கு என்ன ஆனது எனும் கேள்வியை பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்தும் அதே வேளையில், அதற்கு வித்தியாசமான இரண்டாம் பாதியைக் கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறது இயக்குநரின் எழுத்து. டி இமானின் பின்னணி இசையும், ராஜா பட்டாச்சாரியாவின் ஒளிப்பதிவும் படத்தை பலமாக்கியிருக்கிறது. ”நீ இன்றி நான் ஏது?”, ”போகப் போகப் போகாதே” பாடல்கள் காட்சிகளுடன் சேர்த்து அழகாகவே வந்திருக்கும் முணுமுணுப்பு ரகம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் முன் கணிக்கக் கூடிய காட்சிகளால் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. நீளமான இரண்டாம் பாதி, எதிர்மறையான கிளைமாக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். சின்னச் சின்னக் குறைகளைத் தாண்டி தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்களின் பங்களிப்பாகவும் நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்கும் சிக்னல் அட் 11.30 திரைப்படத்தை திரையில் தயக்கம் இல்லாமல் கண்டு ரசிக்கலாம்.