வானிலை: அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை! (நவ. 27)

Wait 5 sec.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (நவ. 27 பகல் 1 மணி வரை) சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 19 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை நல்ல மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (பகல் 1 மணி வரை) தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. TN rain update for next 3 hours