இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், இந்திய அணி 352 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியைக் காட்டிலும் நாங்கள் போட்டியில் பின் தங்கியிருக்கிறோம். இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்தது. நாங்கள் முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். கடைசி நாளில் 90 ஓவர்கள் உள்ளன. ஆட்டத்தை முடிந்த வரை நீண்ட நேரம் எடுத்துச் செல்ல வேண்டும். டெவான் கான்வேவின் மிகப் பெரிய ஆதரவாளர் நான். அவர் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர். நல்ல பந்துகள் கிடைக்கும்போது அவர் சிறப்பாக ஸ்கோர் செய்வார் என்றார்.நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 233 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.New Zealand player Rachin Ravindra has said that the New Zealand team should bat for a long time until the end of the first Test match against India.டெஸ்ட்டில் அதிக சிக்ஸர்கள்: மெக்கல்லம் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!