மகாராஷ்டிரத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் சகாராம் வட்குடே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்குடே, இருமல் காரணமாக, இரண்டு நாள்களுக்கு முன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இரவு 11.45 மணியளவில் அவர் உயிரிழந்தாதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராமராவ் வட்குடே மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். ஏழைகளுக்கு அவர் ஆற்றிய சமூக சேவையை நினைவு கூர்ந்தார்.ராம்ராவ் வட்குடே, சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பிற்காகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். மேலும், மகாராஷ்டிரத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்றும் கூறினார். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.Prime Minister Narendra Modi has expressed grief over the passing of Rajya Sabha MP Ramrao Wadkuteபாஜக மாநிலங்களவை எம்.பி. ராம்ராவ் வத்குடே மாரடைப்பால் காலமானார்!