அய்யனார் துணைக்கு பிறகு எதிர்நீச்சல் -2 வாய்ப்பு! மதுமிதா வருத்தம்

Wait 5 sec.

அய்யனார் துணை தொடரில் ஒப்பந்தமான பிறகு எதிர்நீச்சல் -2 தொடருக்கான வாய்ப்பு கிடைத்ததாக நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.எதிர்நீச்சல் முதல் பாகத்தில் ஜனனியாக பலரின் மனதைக் கவர்ந்த மதுமிதா, எதிர்நீச்சல் -2 தொடரில் நடிக்காததற்கான காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்துக்கான வாய்ப்பை தவறவிட்டதில் தனக்கும் வருத்தம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக நடிகை மதுமிதா பேசியதாவது:''எதிர்நீச்சல் முடிந்த பிறகு இயக்குநர் பிரவீன் பென்னட் 4 சகோதரர்கள் பற்றிய கதையை என்னிடம் கூறினார். மீண்டும் 4 சகோதர்களா? (எதிர்நீச்சல் தொடரும் 4 சகோதர்களைப் பற்றியது) என்று நினைத்துக்கொண்டு கதையைக் கேட்டேன். ஆனால், போகப்போக சுவாரசியம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கதை நன்றாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் தொலைக்காட்சியில் யாரையும் தெரியாது என்பதால், அவற்றை அறிமுகம் செய்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இதை நினைத்தேன்.பிறகுதான் எதிர்நீச்சல் -2 தொடர் குறித்த அறிவிப்பு வந்தது. அதில் மீண்டும் ஜனனி பாத்திரத்தில் நடிக்க அழைத்தனர். ஆனால் இங்கு நான் ஒப்பந்தமாகிவிட்டேன். விஜய் டிவி புதிது என்பதால் பழகிய இடத்துக்கே சென்றுவிடலாமா? என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால், அய்யனார் துணைக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.எதிர்நீச்சல் முதல் பாகம் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கு சிறப்பான அங்கீகாரமும் விருதும் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக மதுமிதா நடித்து வருகிறார்.எங்கள் ஜோடி ஹிட் ஆகும் என நினைக்கவில்லை: நடிகை ஜீவிதா