தமிழ் சினிமாவின் பிரபலமான சில காட்சிகளை ஏஐ உதவியுடன் ஆபாச படங்களாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். ஏஐ பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும் விரைவான செயல் திறன்களுக்கும் பயன்படுவதைத் தொழில்நுட்ப மாற்றங்களாக ஏற்றுக்கொண்டாலும் சிலர் இதனை மிகத் தவறுதலாகப் உபயோகிக்கவும் செய்கின்றனர். ஆரம்பத்தில் நடிகைகளின் புகைப்படங்களை ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இது பலருக்கும் அதிருப்தியைக் கொடுத்தது. எது போலி, எது நிஜம் எனக் கண்டறிய முடியாத துல்லியத்தால் இந்த போலி ஏஐ புகைப்படங்களுக்கு எதிராக நடிகை ரஷ்மிகா மந்தனா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். Strict action must be taken against the misuse of AI Proper regulations are urgently needed— Ayyappan (@Ayyappan_1504) November 22, 2026 இந்த நிலையில், அடுத்தகட்டமாக தமிழ் சினிமாவின் சில காட்சிகளை ஏஐ மூலம் ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். குறிப்பாக டியூட், வல்லவன் திரைப்படக் காட்சியை ஆபாச படங்களாக மாற்றியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை புகைப்படங்களாக மட்டும் தொந்தரவுகள் வந்த நிலையில் சினிமா காட்சிகளையும் அதில் நடித்த நடிகர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக இந்த விடியோக்களை உருவாக்கியவர்களைக் கடுமையாகத் தண்டித்தால் மட்டுமே இது போன்ற விடியோக்களைத் தடுக்க முடியும் எனக் கோரிக்கைகள் எழுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுப்பார்களா?தலை வணங்குகிறேன்... நடிகர் அஜித்தைப் பாராட்டிய நாக சைதன்யா! Some well-known scenes from Tamil cinema are being transformed into pornographic images with the help of AI and then published.