உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் ஊழல் நடந்திருந்தால் எப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும்? என்று முதல்வர் ஜோசப் விஜய் மாணவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் ஊக்கத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா 2-ஆம் கட்டமாக இன்று சென்னை நீலாங்கரையில் தொடங்கியது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், மாணவர்களிடம் முதல் முறையாக அரசியல் பேசினார். இங்கு ஒரேயொரு விஷயத்தை சொல்ல வேண்டும், அதை அரசியலாக்க சிலர் நினைப்பார்கள். அரசியலாக்க நினைத்தாலும் அதுபற்றி கவலை இல்லை. உங்களிடம் அதைச் சொல்ல வேண்டும். இது உங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் சொல்கிறேன். ஊழல் என்பது பழைய விஷயம்தான், மக்களும் ஊழலைப் பார்த்து அதற்குப் பழகிப்போய்விட்டர்கள். ஆனால் நம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுவும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் எப்படி சும்மா இருப்பது?என் மேஜையில் மூன்று கோப்புகள் இருக்கின்றன என்றுதான் சொன்னேன், ஆனால், எதிர்க்கட்சிகள் அதனை திறங்கள் என்று கூறினார்கள். ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் கட்டுப்படுத்தவாவது முயற்சிக்க வேண்டும். பள்ளிகளின் பாதுகாப்பு, வழிகாட்டுதல்களிலும் திமுகவினர் விளையாடியுள்ளனர். நூலகங்களுக்கான புத்தகங்களில்கூட ஊழல் செய்துள்ளனர். ஏஐ வந்துள்ளது, அதை வைத்து வளர்ச்சி இருக்கும் என்று பார்த்தால் அதைப் பயன்படுத்தி முறைகேடு புரிந்துள்ளனர். அறிவுலகமா? ஊழல் உலகமா?உங்கள் அண்ணன், உங்களை நல்வழிப்படுத்துவேன், நல்வழியில் மட்டுமே கொண்டு செல்வேன் என்று கூறினார்.ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி, பெரம்பலூா், கரூா், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா வியாழன், வெள்ளி (நவ.26, 27) ஆகிய 2 நாள்கள் சென்னை நீலாங்கரையில் நடைபெறுகிறது.கடந்த நவ.4-ஆம் தேதி முதல்கட்ட விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். How can one just sit idly by? Vijay questions at the educational awards ceremony!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!