நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனக்கு எதிராக பரப்பப்படும் எதிர்மறை கருத்துகள் குறித்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசஃப், இரட்டா படங்களின் மூலம் அபாரமான நடிப்புத் திறன் கொண்டவர் எனப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். முக்கியமாக, நடிகர் கமல் ஹாசனும் ஜோஜூ நடிப்பைப் பாராட்டியது பெரிதாகக் கவனிக்கப்பட்டது.ஜோஜூ இயக்கிய பனி திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றதுடன் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. இன்றும் பனி திரைப்படத்தைப் பாராட்டி கருத்துகள் பகிரப்படுகின்றன.ஜோஜூ ஜார்ஜ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு, ‘பரிபாடி’ எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, 100 புதுமுக நடிகர்களை ஜோஜூ அறிமுகப்படுத்த உள்ளார்.இந்த நிலையில், தனக்கு எதிராக பிரபல நடிகரும் அவரது மனைவியும் திட்டமிட்டு எதிர்மறையான கருத்துகளைப் பகிர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். யார் அந்த நடிகர் என்பது குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை. தணிக்கை வாரியம் மீது எந்தக் கோபமும் இல்லை: இயக்குநர் ஹெச். வினோத்Actor Joju George has spoken about the negative comments being spread against him.