நீதிமன்ற நடவடிக்கைகளை கணொலி பதிவு செய்யவும் பகிரவும் தடை: உச்ச நீதிமன்றம்

Wait 5 sec.

பொழுதுபோக்கு தளமல்ல, நீதிமன்ற நடவடிக்கைகளை கணொலியாக பதிவு செய்யவும் அதனை பகிரவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தியாக வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை, இது பேசுவதற்கு எதிரான உத்தரவாகக் கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை விடியோ - ஆடியோ பதிவு செசய்து, அதனை நீதிமன்ற அனுமதியின்றி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பு செய்வது, காணொலிகளை வெளியிடுவது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோல்மால்யா பகசி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை காணொலியாகப் பதிவு செய்து, அதில் குறிப்பிட்ட நிகழ்வு வெட்டி எடுப்பது, மாற்றியமைப்பது, வெளியிடுவது, பதிவு செய்வது, மீள் பதிவு செய்வது, பதிவேற்றம் செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்களில் விடியோ அல்லது ஆடியோ வடிவில் பதிவேற்றி வருவாய் திரட்டுதல், இதர டிஜிட்டல் தளங்களில் பதிவிடுவது உள்ளிட்டவற்றை உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் உரிய அனுமதி பெறாமல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், இந்த உத்தரவு, நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு எதிரான தடை உத்தரவு அல்ல, பேசுவதற்கு எதிரான உத்தரவாகவும் இதனை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற காட்சிகளை பகுதியாகவோ, மாற்றம் செய்தோ வெளியிட்டு, அதனால் நீதிமன்ற மாண்பைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, செய்தியாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?