பெலாரஸ் நாட்டின் டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா 100 வாரங்களாக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து வரலாற்றில் இணைந்துள்ளார். டென்னிஸ் வரலாற்றில் முன்னதாக, 9 வீராங்கனைகள் இந்தப் பட்டியலில் இருக்க, பத்தாவது வீராங்கனையாக சபலென்கா இணைந்துள்ளார். கடைசியாக அரினா சபலென்கா விம்பிள்டனில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நவோமி ஒசாகாவிடம் 2-6, 6-7 என நேர் செட்களில் தோல்வியடைந்தார். இருப்பினும் தரவரிசையில் தனது முதலிடத்தை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 117 வாரங்கள் முதலிடம் பிடித்து பெல்ஜியம் வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் ஒன்பதாவது வீராங்கனையாக இந்தப் பட்டியலில் இருக்கிறார். முதலிடத்தில் ஸ்பெட்ஃபி கிராஃப் 377 வாரங்கள் என்ற அபாரமான சாதனையுடன் இருக்கிறார். அடுத்ததாக, கனடா ஓபனில் சபலென்கா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் ஆக.2 முதல் ஆக.10வரை நடைபெற இருக்கின்றன. அதிக வாரங்கள் முதலிடம் பிடித்த வீராங்கனைகள்1. ஸ்டெஃபி கிராஃப் - 377 வாரங்கள்2. மார்டினா நவ்ரதிலோவா – 332 வாரங்கள்3. செரீனா வில்லியம்ஸ் – 319 வாரங்கள்4. கிறிஸ் எவர்ட் – 260 வாரங்கள்5. மார்டினா ஹிங்கிஸ் – 209 வாரங்கள்6. மோனிகா செலஸ் - 178 வாரங்கள்7. இகா ஸ்விடெக் – 125 வாரங்கள்8. ஆஷ் பார்ட்டி - 121 வாரங்கள்9. ஜஸ்டின் ஹெனின் – 117 வாரங்கள்10. அரினா சபலெங்கா – 100 வாரங்கள்100 weeks. Still here. Congrats on reaching 100 weeks as the World No.1, @SabalenkaA!@PIF_en | #PIFWTARankings pic.twitter.com/vbScRt1O1h— wta (@WTA) July 20, 2026ஐசியு, அறுவைச் சிகிச்சை... மெஸ்ஸியின் தோல்விக்கு எழுதியதாக அமிதாப் பச்சன் விளக்கம்! Sabalenka became tenth female tennis player in history to spend 100 weeks as world number one