தில்லியில் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி, தொண்டர்களுடன் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரஞ்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி.பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றினார். இதனால், ராகுல் காந்தி மூக்கில் காயமடைந்தார். அவரின் மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி ரத்தக்கசிவுடன், அங்கிருந்து மாடல் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வலுக்கட்டயமாக காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்டதில், போராட்டத்தில் கலந்துகொண்ட எம்பிக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Pictures of Lok Sabha LoP Rahul Gandhi, protesting with Opposition leaders and workers at Lok Kalyan Marg being detained by Delhi Police.