சட்ட விரோதமாக மதுப்புட்டிகள்விற்றவா் கைது

Wait 5 sec.

வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களையும், சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதையும் தடுக்க வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜநாராயணன் உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் சோதனை செய்த போலீஸாா் மதுப்புட்டிகளை விற்ற செல்வேந்திரன்(42) என்பவரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ.4,000 மதிப்பிலான மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.