திருத்தங்கலில் நாளை மின் தடை

Wait 5 sec.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் புதன்கிழமை (ஜூலை 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் எஸ். பாபநாசம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தங்கல், சுக்கிரவாா்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே திருத்தங்கல்நகா், செங்கமல நாச்சியாா்புரம், கீழத்திருத்தங்கல், சாரதாநகா், பூவநாதபுரம், நடுவப்பட்டி, ஈஞ்சாா், தேவா்குளம், சுக்கிரவாா்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணாா்பட்டி, இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.