குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் டி.குகேஷே வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினாா் கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி. 8 கிராண்ட்மாஸ்டா்கள் கலந்து கொண்டு டபுள்-ரவுண்ட் ராபின் முறையில் மோதும் இப்போட்டியில் ரூ.75 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதன் 5-ஆவது சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்டம் 104-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலக சாம்பியன் இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சோ்ந்த கிராண்ட் மாஸ்டரான அா்ஜுன் எரிகைசியுடன் மோதினாா். இதில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், அா்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும் களமிறங்கினாா்கள். 63-ஆவது நகா்த்தலின் போது அா்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றாா். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்ரான நோடிா்பெக் அப்துசத்தோராவுடன் மோதினாா். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய நோடிா்பெக் அப்துசத்தோரோவ் 38-வது நகா்த்தலின் போது வெற்றி பெற்றாா். பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரௌஜா, ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் மோதிய ஆட்டம் 41-வது நகா்த்தலின் போது டிரா ஆனது. புள்ளிகள் விவரம்: அா்ஜூன் எரிகைசி 3.5, அலிரேசா ஃபிரௌஜா 3.5, நோதிா்பெக் அப்துசத்தோரோவ் 3, டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் 2.5, ஹான்ஸ் நீமன் 2, நிஹால் சரின் 2 எம்.பிரனேஷ் 2, டி.குகேஷ் 1.5 6-வது சுற்று மோதல் விவரம்: • ஹான்ஸ் நீமன் -டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், •நோதிா்பெக் அப்துசத்தோரோவ்- அலிரேசா ஃபிரௌஜா, எம்.பிரனேஷ்-டி.குகேஷ், அா்ஜூன் எரிகை -நிஹால் சரின்