ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்புப் படை சாா்பில் திங்கள்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அன்னதாசன் தலைமை வகித்தாா். இதில் சிங்கப்பெண் சிறப்புப் படை தலைமைக் காவலா் சுனிதா, காவலா் சௌமியா ஆகியோா் கருத்துரையாற்றினனா். சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பெண் சிறப்பு படை உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா கலந்து கொண்டு சிங்கப்பெண் திட்டத்தின் பயன்கள் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரையாற்றினாா். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி நிகழ்ச்சி நிரல்னா் பாலமுருகன் செய்தாா். முன்னதாக விரிவுரையாளா் கலாதேவி வரவேற்றாா். விரிவுரையாளா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.