கடன் பிரச்னை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Wait 5 sec.

பட்டுக்கோட்டையில் கடன் பிரச்னையால் இளைஞா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். லட்சத்தோப்பு , மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த முத்து மகன் மணிகண்டன் (27). இவா், பட்டுக்கோட்டையில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் டிங்கா் கடையில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 2024-இல் தாயாரின் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவா் மனஉளைச்சலில் இருந்ததாகவும், வேலைக்கு போகாமல், அதிக அளவில் மது போதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டு கொண்டாராம். தகவலின்பேரில், அங்கு வந்த போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.