பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூலை 22) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், மதுக்கூா் நகா், கன்னியாக்குறிச்சி, காடந்தங்குடி, அத்திவெட்டி, முத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மதுக்கூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.