இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்

Wait 5 sec.

சிஜேபி தலைமையிலான இளைஞர்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யவேண்டும் என சிஜேபி கட்சி தலைமையில் தில்லியில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடித்தத்தை அவர் இன்று பிரதமர் மோடிக்கு அனுப்பினார். இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததற்கு அரசியல் கட்சிகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய விவசாயிகள் முதலில் இதனைச் செய்து காட்டினார்கள். இன்று இளைஞர்கள் இதைச் செய்துள்ளனர். நாடு முழுவதும் நேரடியாகவும், இணைய வழியாகவும் போராடி இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்திய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, நீட் தேர்வும் ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். The farmers of India did it first.The youth have done it today.Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.… pic.twitter.com/QgxFe6thhp— M.K.Stalin (@mkstalin) July 25, 2026