குறைவான வசூலைச் செய்த ஜன நாயகன் திரைப்படம்!

Wait 5 sec.

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலைச் செய்யாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 23) உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது. ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன. இதனால், இப்படம் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி முதல் நாள் வசூலை (ரூ. 152 கோடி) முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு நாள் வசூலாகவே ஜன நாயகன் உலகளவில் ரூ. 112 கோடியையே வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் இப்படம் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதல்வர் விஜய்யின் திரைப்படங்கள் முதல் நாள் வசூலாக ரூ. 100 கோடியைக் கடந்துகொண்டிருந்த நிலையில், ஜன நாயகன் குறைவாகவே வசூலித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - தெலுங்கிலும் பாடிய சூர்யா!Fans are shocked that Vijay's film Jananayagan did not achieve the expected box-office collections.