மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு

Wait 5 sec.

கல்வித் துறை இலாகா மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி தற்போது உள்ளார். இந்த நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை இலாகாவை ஒதுக்கீடு செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார்.மேலும் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைவும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்த நிலையில் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. தில்லி ஜந்தர் மந்தரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மாணவர் போராட்டங்கள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜிநாமா செய்தார். அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!Union Minister Pralhad Joshi has been given additional charge of the Education Ministry after President Droupadi Murmu accepted Dharmendra Pradhan's resignation on the Prime Minister's advice.