ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி!முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா 8 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.ஜிம்பாப்வே தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி, ரிச்சர்ட் நிகராவா, பிராட் ஈவன்ஸ், நியூமேன் நியாம்ஹுரி மற்றும் பிரையன் பென்னட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 24 ரன்கள், ரியான் பர்ல் 20 ரன்கள், பிராட் ஈவன்ஸ் 19 ரன்கள் , டியான் மையர்ஸ் 12 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, யஷ் தாக்குர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே மற்றும் திலக் வர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூலை 26) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.The Indian team won the second T20 match against Zimbabwe by 90 runs.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?