பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அதிகம் தேவை: மாளவிகா மோகனன்

Wait 5 sec.

நடிகை மாளவிகா மோகனன் பெண் படைப்பாளர்களின் தேவை அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். நடிகை நடிகை மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர் படத்தில் அறிமுகமானார். பின்னர், தங்கலான், ஹிருதயப்பூர்வம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். இதனால், மலையாளம், தமிழிலும் முன்னணி நடிகையாக பிரபலமடைந்துள்ளார். தற்போது, சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மாளவிகா மோகனன், “இந்தியாவில் பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. பெண் படைப்பாளர்கள் அதிகரித்தால் அதற்கான காத்திரமான கதைகளும், சண்டைக்காட்சிகளும் உருவாகும். நம்மூர் சினிமாவிலும் கில் பில் போன்ற நாயகிகளை மையமிட்ட ஹாலிவுட் தர திரைப்படங்களை எடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். போலி புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ வேண்டாம்: தமன்னாActress Malavika Mohanan has stated that there is a great need for female creators.