இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளார்.டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடியது. ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி இந்த இரண்டு டி20 தொடர்களையும் இழந்தது.இந்த நிலையில், தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்ததிலிருந்து மீண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.Game set and match ✅A comprehensive and dominant 9⃣0⃣-run victory for #TeamIndia With that they clinch the #ZIMvIND T20I series by 2⃣-0⃣ with one game to play Scorecard ▶️ https://t.co/Z8UUziVx8d pic.twitter.com/0hfpuJ6aCx— BCCI (@BCCI) July 25, 2026இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றி குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நாங்கள் மிகவும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளோம். அணியில் உள்ள அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். 180-200 ரன்கள் நல்ல ஸ்கோராக இருக்கும் என நினைத்தேன். ஆனால், 219 ரன்கள் எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அணியில் உள்ள வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நாளை நடைபெறும் கடைசிப் போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றார்.ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இழந்தது குறிப்பிடத்தக்கது.Shreyas Iyer has won a T20 series for the first time since being appointed captain of the Indian team.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கவுள்ள பிசிசிஐ; பும்ரா இடம்பெறுவாரா?