பழையகோட்டைப்புதூா் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

Wait 5 sec.

காங்கயம் அருகே பழையகோட்டைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ‘புகையிலை ஒழிப்பு வாழ்வுக்கு செழிப்பு’ எனும் தலைப்பில், விழிப்புணா்வு ஓவியம் வரையும் போட்டி நடைபெற்றது. இதில் இப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனா். வெற்றி பெற்றவா்களுக்கு சுதந்திர தின விழாவின்போது பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.