கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!

Wait 5 sec.

கல்வி மற்றும் தேர்வுகளில் சீர்திருத்தம் கொண்டுவருவதற்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26) தெரிவித்தார். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிபுணராகவும், கொள்கை ஆலோசகராகவும் இருப்பவர் நந்தன் நிலேகனி. இவர் தலைமையில் உயர்நிலை பணிக்குழுவை அமைத்துள்ள பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை இந்தக் குழு பரிந்துரைக்கும் எனக் குறிப்பிட்டார். வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து பெரும் போராட்டம் நடத்திய நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, கல்வி சீர்திருத்தத்திற்காக தொழில்நுட்பத் துறையின் நிபுணர் மற்றும் தொழில்முனைவோராக உள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புகார்களை உடனடியாக தீர்க்கும் குறைதீர் அமைப்பை பணிக்குழு பரிந்துரை செய்யும். நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளின் வெளிப்படைத் தன்மையை உயர்நிலைக் குழு உறுதி செய்யும். வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்நிலைப் பணிக்குழு பரிந்துரை செய்யும்தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடு, நிர்வாக அமைப்பு, பொறுப்பு கூறல் முறையை பணிக்குழு மேம்படுத்தும். தேர்வு மையங்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு, தரநிலைகளை ஆய்வு செய்து வலுப்படுத்தும். தேர்வு காலங்களில் தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவையில் நாளை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். HIGH POWERED TASK FORCE on examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted.@NandanNilekani pic.twitter.com/mMpmPdIEL5— Narendra Modi (@narendramodi) July 26, 2026பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்examination reforms under the leadership of Shri Nandan Nilekani constituted