ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி!

Wait 5 sec.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ரியான் பர்ல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, வெஸ்லி மத்வீர் 28 ரன்கள், பென் கரண் 20 ரன்கள், டியான் மையர்ஸ் 19 ரன்கள், பிராட் ஈவன்ஸ் 14 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். யஷ் தாக்குர் இரண்டு விக்கெட்டுகளையும், அசோக் சர்மா மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. The Indian team won the third T20 match against Zimbabwe by 35 runs.புவனேஸ்வர் குமாரின் சாதனையை சமன் செய்த மயங்க் யாதவ்!