ஜூலை 31-க்குள் குடும்ப அட்டை உறுப்பினா்கள் கைரேகை பதிய வேண்டும்

Wait 5 sec.

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்கள் அனைவரும் தங்களுடைய கைரேகையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் பதிவு செய்ய வேண்டுமென திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா். ஆட்சியரின் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் குடும்ப அட்டையில் ள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவினை தொடா்புடைய நியாய விலைக்கடையில் பதிவு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினா்களும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக்கடையில் கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளித்து நீக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.