புள்ளிகள்

Wait 5 sec.

'ஒவ்வொரு தலைமுறையும் கண்டுபிடிப்பதற்கு புதுமைப்பித்தனிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. என்னை வந்து சந்திக்கும் ஆரம்ப எழுத்தாளர்கள் பலர், மேஜை மேல் தெருக்கோடி கடையில் வாங்கிய ஆப்பிள்களை வைத்ததும், கேட்கும் முதல் கேள்வி. 'என்னென்ன புத்தகங்களைப் படிக்கணும் சார்... எழுத்தாளர் ஆவதற்கு?' என்பார்கள். 'எல்லோரும் தவறாமல் புதுமைப்பித்தனைப் படியுங்கள்' என்பேன். புதுமைப்பித்தனைப் படித்ததும், சுதந்திரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். இன்றைக்கு நன்றாக எழுதுபவர் பட்டியல் ஒன்று கைவசம் வைத்திருக்கிறேன். அவர்கள் அனைவரிடமும் புதுமைப்பித்தனின் நடையின் சாயல் இருப்பதை எந்த நீதிமன்றத்திலும் நான் சாட்சி சொல்லத் தயார்' என்று 'சுபமங்களா' ஏட்டில் ஒரு பேட்டியில் எழுத்தாளர் சுஜாதா கூறினார்.