போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

Wait 5 sec.

குனியமுத்தூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, குனியமுத்தூா் போலீஸாா் குறிஞ்சி நகா் பகுதியில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், அவா்கள் கோவை, அண்ணா நகா் பி- பிளாக்கை சோ்ந்த முகமது ஷெரீப் (21), ராமநாதபுரம், சுங்கம் பகுதியைச் சோ்ந்த அப்சல் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.முகமது ஷெரீப் மீது குனியமுத்தூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.