இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

Wait 5 sec.

கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் நீட்சியாக, கார்கில் போர் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கார்கில் போர் வெற்றி நாளன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் காட்டிய துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நமது நாடு அந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் நாட்டின் பெருமையாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத நாட்டுப்பற்றும் கடமை உணர்வும் தலைமுறைகளைத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.On Kargil Vijay Diwas, our nation expresses gratitude to the brave soldiers for their extraordinary courage and commitment towards securing India. Their valour in the face of the most formidable conditions will forever remain a source of national pride. Their unwavering…— Narendra Modi (@narendramodi) July 26, 2026முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!Prime Minister Narendra Modi expressed his gratitude on Sunday (July 26) to the soldiers who defended India during the Kargil War.