கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

Wait 5 sec.

கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில், கார்கில் போர் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.கார்கில் போர் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு, நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். 1999 ஆம் ஆண்டு கார்கிலின் மலைகளில் அபாரமான வீரத்தை வெளிப்படுத்திய அந்த வீரர்கள் அனைவருக்கும் நாடு என்றென்றும் நன்றியுடனும் கடமையுடனும் இருக்கும்.இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத வீரம், தியாகம் மற்றும் உறுதி ஆகியவை வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி Union Defence Minister Rajnath Singh laid a wreath and paid tribute at the Kargil War Memorial.