நடிகர் கமல் ஹாசன் பகிர்ந்த லத்தீன் மொழி புதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. சிலர் அவரது பதிவை கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் இறுதியில் கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ததும் போராட்டம் முடிவடைந்தது. இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இந்தியா முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திரைப்பிரபலங்கள் பலரும் கடைசி கட்ட நேரத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கதக்கது. நடிகரும் எம்பியுமான கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வெற்றி குறித்து, “வோக்ஸ் போபுளி (vox populi)” எனப் பதிவிட்டுள்ளார். இது லத்தீன் மொழியில் வரும் வார்த்தையாகும். இதற்கு ’மக்களின் குரல்’ என்று பொருள். பொதுவாகவே கமல் பேசுவது புரியாது, வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறும்நிலையில், இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தப் பதிவுக்கு சிலர் கமலின் புதுமைக்கு ஆதரவாகவும் சிலர் இதெல்லாம் வெறுமனே பகட்டு என கிண்டல் செய்தும் வருகிறார்கள். கமல் அடுத்ததாக கல்கி 2, கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படங்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. Pesunaa Thaan Puriya Maatengudhu Nu paathaa,Tweet Kuda Puriya Maatengudhuuuu pic.twitter.com/1sGXGq4nd9— Tamil_Memes (@Kollywood_alan) July 25, 2026 pic.twitter.com/05olHOhDjz— proud_கொத்தடிமை❤️ (@Comrade_TVK25) July 25, 2026Vox populi Kamal Haasan gets trolled for his Latin phrase of cjp victory