தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

Wait 5 sec.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய தனியார் விமானம் புறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிர்சா முண்டா விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, 58 பயணிகளுடன் தனியார் நிறுவன விமானம் சனிக்கிழமை மாலை சுமார் 6.20 மணியளவில் இங்கு வந்து சேர்ந்தது. தரையிறங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விமானம் ஒடிசா தலைநகருக்குத் திரும்ப முடியவில்லை. அதேவேளையில் ராஞ்சியைச் சேர்ந்த பயணிகள் அனைவரும் கொல்கத்தாவில் இருந்து வந்த மற்றொரு விமானம் மூலம் புவனேஸ்வர்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அது கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. A Bhubaneswar-bound flight could not take off from here after a technical glitch was detected in the aircraft during a check, Birsa Munda Airport Director Vinod Kumar said on Sunday.பாட்னாவில் தேஜ் பிரதாப் யாதவ் கைது!