அந்த ஒருவரால் நாடு சீரழிந்தது... பதிவைப் பகிர்ந்த நடிகை ஜோதிகா!

Wait 5 sec.

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் - இளைஞா்கள் நடத்திய தொடா் போராட்டம் எதிரொலியாக, தா்மேந்திர பிரதான் பதவி விலகினாா். பிரதானின் ராஜிநாமா உள்பட சிஜேபியின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து, தில்லியில் கடந்த 36 நாள்களாக நீடித்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.நீண்ட காலம் கழித்து மாணவர்களின் போராட்டத்தால் நாட்டின் கல்வி அமைச்சரே பதிவு விலகியது ஜன நாயகத்தின் மேல் நம்பிக்கையளிப்பதாகவும் இன்றைய இளம் இளைஞர்கள் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகின்றனர் என கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன. போராட்டம் முடிந்ததும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, “தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்துள்ளார். நீங்கள் பயப்படால் இந்த அரசாங்கத்திற்குத் தலைவணங்காமலும் இருந்தால், யாருடைய ராஜிநாமாவை வேண்டுமானாலும் பெறலாம். ஜனநாயகத்தில் அஞ்சாதீர்கள்.” என்றார். மேலும், ”என்னை ஹீரோவாக மாற்றி தவறு செய்யாதீர்கள். ஏற்கனவே, ஒருவரை ஹீரோவாக மாற்றியதால்தான் நாடு சீரழிந்து கிடக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். தற்போது, நடிகை ஜோதிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வரிகளைப் பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட பலரும் ஜோதியாக நேரடியாகவே ஆளும் அரசில் இருப்பவர்களைத் தாக்குகிறார் என அப்பதிவை வைரலாக்கி வருகின்றனர். மூச்சு வாங்குதா மாமா? ஆச்சரியப்படுத்தும் நடிகர் சிவாஜியின் வெளிவராத விடியோ! A post shared by actress Jyothika on Instagram is gaining attention on social media.