கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டதில் காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர்.இந்த நிலையில், இன்று நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியவுடன், மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.அப்போது, எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.தொடர்ந்து, நீட் தேர்வால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படையும் பிரச்னைகளை மையமாகக் கொண்டே இந்தப் போராட்டம் நடைபெற்றதாக நீதிபதிகளிடம் அந்த வழக்கறிஞர் தெரிவித்து வாதத்தை முன்வைத்தார்.அப்போது, அவரது பேச்சை நிறுத்திய நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர், “மிக்க நன்றி” என்று பதிலளித்தனர்.தொடர்ந்து, ஆயுதமற்ற போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தாக்குவதாக விடியோ காணொலிகளை அந்த வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.ஆனால், “காணொலிகளை காண எங்களுக்கு விருப்பமில்லை. அதை பார்க்க எங்களுக்கு நேரமில்லை” எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.முன்னதாக, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா அமர்வில், தில்லி காவல்துறை நடவடிக்கை தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டது.அதனை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதிகள், “நீதிமன்றத்தை இதில் இழுக்காதீர்கள்" எனத் தெரிவித்து, விசாரணைக்கு ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.Don't waste time - Supreme Court refuses to hear the Delhi Police lathi-charge caseஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை