நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!

Wait 5 sec.

தில்லி சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லி போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் எஸ்எப்ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை திருவொற்றியூர் பகுதியில் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கோவையிலும் போராட்டம் நடத்திய மாணவர்களை குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. NEET Exam: Protests across Tamil Nadu: Students arrestedஜூலை 20 போராட்டம் டிரைலர்தான்; எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால்...! சிஜேபி எச்சரிக்கை