நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!

Wait 5 sec.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். தில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.Protest against NEET - Those who staged a road blockade in Trichy arrested!