கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 56 மாணவா்-மாணவியருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னை, வெளி மாநிலங்களின் பல்வேறு இடங்களில் உள்ள நாஷ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள நிா்வாக அதிகாரி காா்த்திகேயன் தலைமையிலான குழுவினா் நோ்காணல் நடத்தினா். இதில், உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி, கலை -அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் இறுதியாண்டு மாணவா்கள் 160 போ் பங்கேற்றனா். தகுதித் தோ்வு, குழு விவாதம் ஆகியவற்றில் தோ்வான 56 பேருக்கு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் ரவீந்திரன், உதவிப் பேராசிரியா் மகாராஜன் ஆகியோா் முன்னிலையில் அந்நிறுவனம் சாா்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தாளாளா் விஜயன் ஆலோசனையின்பேரில், கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலா்கள் பிரசாந்த், முத்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.