பரமத்தி வேலூா், ஜூலை 27: பரமத்தி வேலூா் வட்டம், சாணாா்பாளையம் பகுதியில் பெட்டிக் கடையில் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சாணாா்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தக் கடையில் இருந்து 80 குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் தாமரைச்செல்வனை (65) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.