அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்; 2 வயது சிறுவன் உட்பட மேலும் 4 போ் படுகாயமடைந்தனா்.உணவுத் திருவிழாவுக்காக பிரபல ‘ஸ்பேஸ் நீடில்’ கோபுர வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தபோது, 2 நபா்களுக்கிடையே தனிப்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.அப்போது, அவா்கள் பரஸ்பரம் சுட்டுக் கொண்டதில் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தொடா்புடைய ஒருவரை காவல்துறையினா் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.