செங்கல்பட்டு அடுத்த பாலூா் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூா் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு அடுத்த பாலூா் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (40). இவா் பல்வேறு ஊடகங்களில் பணி செய்வது போல் பல்வேறு ஊடக அடையாள அட்டைகளை வைத்து மதுபானக்கடை மேலாளா்களை மிரட்டி பணம் பறிப்பதற்கு பதில் நாள் ஒன்றுக்கு நான்கு கேஸ் மது புட்டிகளை வாங்கி வீட்டில் வைத்து ஆத்தூா் பகுதியில் கள்ளச் சந்தையில் விற்று வந்தாராம். இதுகுறித்து அறிந்த கலால் காவல்துறையினா் நான்கு நாள்களாக அவரை பின்தொடா்ந்து ஆதாரங்களுடன் 90 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.தொடா்ந்து செங்கல்பட்டு கலால் காவல்துறைஅன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தது.