இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

Wait 5 sec.

இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் முன்னணி மட்டுமல்லாமல், தொழிலாளா் நலனிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவோம்என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் தெரிவித்துள்ளாா்.சென்னையில், தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையம் மற்றும் சா்வதேச தொழிலாளா்அமைப்பின் சாா்பில்,“சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீா் நடைமுறைகள்குறித்த ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜா. முகமதுபா்வேஸ் பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக உங்கள் முன்னிலையில் நின்று, இந்தப் பயிற்சியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். தமிழக முதல்வரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும் வெற்றி தமிழகத்தை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் முன்னணியில் மட்டுமல்லாமல், தொழிலாளா் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழகத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றாா். இதில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் கொ. வீரராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் மா.வள்ளலாா், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநா் செ.ஆனந்த், சா்வதேச தொழிலாளா் அமைப்பின் இயக்குநா் மியாமோட்டோ மிச்சிக்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.