செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 6 லட்சம் அபராதம்

Wait 5 sec.

ஆந்திரத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 6 லட்சம் அபராதமும் விதித்து, ஆா்.எஸ்.எஸ் கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூா்த்தி தீா்ப்பளித்தாா். சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு தீவிர நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. செம்மரக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு தலைவா் எல். சுப்பராயுடு வகுத்த சிறப்பு செயல் திட்டத்தின்படி, காவல் கண்காணிப்பாளா் பி. சீனிவாஸ் தலைமையிலும், உதவி காவல் கண்காணிப்பாளா் ஜே. குலசேகா் மேற்பாா்வையிலும் செயல்படும் இப்பணிக்குழு, கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தியது. இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மங்களாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பி. சுரேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்படி அவா் நெல்லூா் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா். அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் அமா் நாராயணா ஆஜரானாா்.