ரேனிகுண்டா 2 படத்தின் பாடல் புரோமோ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) வெளியாகியுள்ளது.இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ரேனிகுண்டா”. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு மற்றும் ஷாமி திலகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் பன்னீர் செல்வமே தயாரிக்கும் இப்படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கவிஞர் யுகபாரதி எழுத, பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.A beautiful tune is ready to steal hearts. ✨ #Ekavali promo from #Renigunta2 is out now.Full song drops on July 29 at 6 PM ▶️ https://t.co/up7RsgpmF7A @manuravi_7 Musical.Sung by @sidsriram ️Directed by @Directorpanneer.Choreography by Azar.@pff_offl pic.twitter.com/she1sOyggQ— Kings Studio (@kings_studio_) July 27, 2026ஜிவி பிரகாஷின் இம்மோர்டல் புதிய பாடல் வெளியீடு! The song promo for the movie *Renigunta 2* was released on Sunday (July 27).