கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது குறித்து பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.தங்கப் பதக்கம் வென்ற பிறகு மீராபாய் சானு கண்ணீருடன் காணப்பட்டார். இந்த நிலையில், தான் அழுததற்கான காரணம் குறித்து மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். போட்டிக்கு முந்தைய நாளில் வண்ணத்துப் பூச்சிகள் வடிவில் தேசியக் கொடி ரிப்பனை தயார் செய்து அதனை அணிந்து கொண்டேன். தங்கப் பதக்கம் வென்ற பிறகு தேசியக் கொடியைப் பார்த்தது மற்றும் தேசிய கீதத்தைக் கேட்டதும் என்னை அறியாமல் என்னுடைய கண்களில் நீர் பெருகியது. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்ததால், என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் நன்றிகூற விரும்புகிறேன் என்றார்.கடந்த இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.Weightlifter Mirabai Chanu has opened up about shedding tears after winning the gold medal at the Glasgow Commonwealth Games.விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?