கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு திட்டம்!

Wait 5 sec.

கரூர் கூட்டநெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று (ஜூலை 27) தெரிவித்தார். கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று ரத்து செய்தது.அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாகக் கூறுவதை ஏற்க இயலாது என்றும், திறன் வளர் பயிற்சி வழங்கி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு உதவலாமே? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், அரசுப் பேருந்து விபத்தில், பட்டாசு ஆலை விபத்தில் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார். கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பலியானவர்களின் குடும்பங்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் அரசுத் தரப்பிலும், தவெக தரப்பிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது தவெக அரசுப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த ஜூலை 10 ஆம் தேதி, கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 31 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கியிருந்தார். கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்Government jobs granted to families of Karur victims revoked; TVK plans to move the Supreme Court