ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

Wait 5 sec.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வெஸ்லி மத்வீர் 39 ரன்கள், மருமானி 27 ரன்கள் மற்றும் ரியான் பர்ல் 26 ரன்கள் எடுத்தனர்.இந்தியா தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!126 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி நோக்கி விளையாடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.இந்திய அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 35 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் மற்றும் திலக் வர்மா 6 ரன்கள் எடுத்தனர்.பிளெஸ்ஸிங் முசராபானி இரண்டு விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் நிகராவா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, 8-வது போட்டியில் அவர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. The Indian team won the first T20 match against Zimbabwe by 7 wickets.கவுன்டி கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ்..! இந்திய அணிக்கு திரும்புவாரா?