மாணவர்கள் தாக்கப்படும் விடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? - பா. ரஞ்சித் கேள்வி!

Wait 5 sec.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தமிழக காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி தாக்குதல் நடத்திய விடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் தலைமையில் இன்று (ஜூலை 23) நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.இந்தப் போராட்டத்தில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், மாணவர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபற்றி வெளியான விடியோக்களை தமிழக முதல்வர் விஜய் பார்க்கவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுபற்றி, அவர் பேசியதாவது: “மாணவர்கள் போராட்டத்தை பாஜக ஒடுக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தமிழக அரசு ஏன் ஒடுக்க வேண்டும்? பாஜக சமூகநீதிக்கு எதிரான கட்சி. ஆனால், நீங்கள் பாசிசத்துக்கு எதிரானவர்கள். போராடுகின்ற மாணவர்களை ஏன் அடிக்கிறீர்கள்? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது? பேட்ச் இல்லாமல் அடிக்கும் அளவிற்கு கோழைகளா நீங்கள்? நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீதான தாக்குதல் விடியோக்களை இங்குள்ள முதல்வர் பார்க்கவில்லையா? ஏன் காவலர்களைக் கொண்டு அவர்களை ஒடுக்க வேண்டும். நீங்கள் நீட் எதிர்ப்பாளர் தானே? நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென உங்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. அப்படியானால், மாணவர்கள் போராடுவதற்கு நீங்களே ஒரு இடம் கொடுங்கள். இதைதான் இந்தப் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். மாணவர்கள் போராடுவதற்கு ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக்கொடுங்கள். உங்களோடு இணைந்து நாங்களும் போராடுகிறோம்” எனக் கூறியுள்ளார்.இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள்! - சிஜேபிக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு!Director Pa. Ranjith has condemned the attack by the police on students who were protesting against the NEET exam.