தீவிரமடையும் சிஜேபி போராட்டம்! இணைய சேவையை முடக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Wait 5 sec.

தில்லியில் கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்து நிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கி.மீ சுற்றளவில் இணையச் சேவையை முடக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர்.நீட் முறைகேடுகளைக் கண்டித்தும், மாணவர்கள் மீது தேவையற்று தாக்குதல் நடத்தியைக் கண்டித்தும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டுமென்று, பிரதமர் இல்லத்தின் முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் ஜூலை 21-ல் தர்னாவில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து இன்றும் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், நாளை நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டம் 34-வது நாளை எட்டியுள்ளது. தில்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட பல வன்முறைச் சம்பவங்களில் ஆறு காவலர்கள் காயமடைந்தனர். இதனால், நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கி.மீ சுற்றளவில், இன்று நள்ளிரவு 12 மணி வரை இணையச் சேவையை முடக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.People gather at Sansad Marg to join the Cockroach Janta Party (CJP) protest demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan over NEET paper leak issue.