செவ்வாய்க்கிழமை காலை விடியும்போது தலைநகர் தில்லியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. ஒருபக்கம் கடுமையான வெப்பம் குறைந்தாலும், மறுபக்கம் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.தில்லிக்கு, இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும், ஓரிரு இடங்களில் மாலை 3 மணி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.இந்த நிலையில், தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் வெள்ளம் சூழப்பட்டுள்ளது. ஷங்கர் விஹார் பகுதி, பாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.ஏரளமான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.Traffic Update:Waterlogging reported at Pandav Nagar Underpass & R/A Murga Mandi. Dewatering is in progress. Traffic personnel are deployed on-site.Commuters are advised to drive cautiously and follow the directions of traffic personnel. @dtptraffic @DelhiPolice pic.twitter.com/B9FkCgbWmg— DCP Traffic ER (@DcpTraffic8) July 28, 2026 புதன்கிழமையும் தில்லியில் மழை பெய்யும் என்றும் பல இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த ஒரு சில நாள்களுக்கு தொடர்ந்து தலைநகர் புது தில்லியில் மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்தது.